சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டம் அமல்

प्रविष्टि तिथि: 21 MAR 2023 4:02PM by PIB Chennai

இந்திய இளைஞர் வெளிநாட்டில் கல்வி பயில உதவும் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் செலவீனங்கள், கடந்த 2018-19ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் 2  தேசிய வெளிநாட்டு கல்வி உதவித் தொகைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒன்று,  பழங்குடியினர், மலைவாழ் மக்கள், நிலமில்லா வேளாண் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய  கலைஞர்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம் ஆகும். மற்றொன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டமாகும். இவ்விருதிட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2021-22 ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. 

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்  சுஸ்ஸ்ரீ பிரதீமா பௌமிக் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.

***

SM/ES/RS/KRS

 

 


(रिलीज़ आईडी: 1909290) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English