சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
செங்கல்பட்டில் சாலையோர வியாபாரிகளின் டிஜிட்டல் நிதிச் சேர்க்கை
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2023 10:51AM by PIB Chennai
மார்ச் 20, 2023 அன்று செங்கல்பட்டில் சாலையோர வியாபாரிகளின் டிஜிட்டல் நிதிச் சேர்க்கைக்கான “ஜி20 மக்கள் பங்கேற்பு” இயக்கம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து சுமார் 100 சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஊக்குவிப்பதற்காகவும், ஜி20-யின் இலக்கான டிஜிட்டல் நிதிச் சேர்க்கையை அடைவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சாலையோர வியாபாரிகளுக்கு கியூ ஆர் குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் பேமெண்ட்கள் குறித்து விளக்கப்பட்டது. மற்றும் சில விற்பனையாளர்களுக்கு கியூ ஆர் குறியீடு விநியோகிக்கப்பட்டன. சாலையோர வியாபாரிகள் தங்கள் வெற்றிப் பயண விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் இயக்கத்தின் போது பங்கேற்பாளர்களுக்கு ஜி20 நினைவுப் பரிசுகள் (தொப்பிகள், டி-சர்ட்டுகள், சணல் பைகள்) மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

***
(வெளியீட்டு அடையாள எண்: 1909021)
வருகையாளர் எண்ணிக்கை : 164