சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் “மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல்” என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சியை நடத்துகிறது
Posted On:
20 MAR 2023 3:19PM by PIB Chennai
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் “மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல்” என்ற தலைப்பில் தேசிய தொழிற்நுட்பக் கழகத்தைசேர்நத மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறை மற்றும் இயற்பியல் துறையும் , பூம்புகாரிலுள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (மீன்), எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் (MSSRF) இனைந்து நடந்தும் மூன்று நாள் பயிற்சி திட்டமானது இன்று (20.03.2023) காலை பூம்புகாரில் உள்ள எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்-ல் தொடங்கியது. இந்தப் பயிற்சித் திட்டம், “தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் எஸ்சி சமூகத்தின் சமூக - பொருளாதார மேம்பாட்டிற்கான எஸ்டிஐ மையம்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இப்பயிற்சித் திட்டத்தினை கழகத்தின் இயக்குனர் முனைவர் கி. சங்கர நாராயணசாமி அவர்களும் கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் அவர்களும் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர். முனைவர் ஹரிகோவிந்தன் வி.பி, முதன்மை ஆய்வாளர் (DST-SEED Project) அவர்கள் பேசுகையில் காரைக்கால் போன்ற கடலோரப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றின் திறனைப் பயன்படுத்துவதற்கும், மேலும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வழிகாட்டுதல் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.
கழகத்தின் இயக்குனர் முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்கள் பேசுகையில் தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவானது, சமூகத்தின் நேரடி நன்மைக்காகவும், சமூக மற்றும் நிதி அதிகாரமளித்தலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார். மேலும் அவர் வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களாக மாறுவதற்கான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, பங்கேற்பாளர்கள் தாங்களே சொந்தமாக சிறிய அளவிலான தொழில்களைத் தொடங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இப்பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்ட பூம்புகார் அனைத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் மீன்வள மைய தலைவர் டாக்டர் வேல்விழி அவர்கள் 35,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் பயிற்சி அளித்ததையும், பல சுயஉதவி குழுக்களுக்கு வழிகாட்டிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார், மேலும் அவர் இப்பயிற்சித் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கினார்.
இப்பயிற்சித் திட்டத்தில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 62 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளனர். முனைவர் அம்ர்தா பிடே, திட்டத்தின் இணை ஆய்வாளர் (DST-SEED Project) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இப்பயிற்சித் திட்டத்தின் ஏற்பாடுகள் அனைத்தையும் முனைவர். ஹரிகோவிந்தன் வி.பி, முதன்மை ஆய்வாளர் (DST-SEED Project) அவர்களும் முனைவர். அம்ர்தா பிடே, இணை ஆய்வாளர் (DST-SEED Project) அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் தொடர்புக்கு: டாக்டர் அரிகோவிந்தம், போன்: 94953 14044
***
(Release ID: 1908779)
Visitor Counter : 106