சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால் குஞ்சுகளை கடலில் விடுதல் நிகழ்வு

Posted On: 17 MAR 2023 2:27PM by PIB Chennai

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY - Pradhan Mantri Matsya Sampada Yojana) பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால் (Penaeus semisulcatus) குஞ்சுகளை கடலில் விடுதல் நிகழ்வு 17.03.2023 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில் 1.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், முனைக்காடு, பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், 'தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர், Dr. G. தமிழ்மணி மற்றும் விஞ்ஞானிகள், மீனவர்கள் மற்றும் நிலையத்தின் ஊழியர்களால் கடலில் விடப்பட்டன. இத்தகைய முயற்சிக்கு இந்திய அரசு மற்றும் ICAR-CMFRI க்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், பச்சை வரி இறால் வளத்தை பாதுகாக்க, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். திட்டம் துவங்கியதிலிருந்து (பிப்ரவரி, 2022), இதுவரை 53.54 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி, Dr. B. ஜான்சன் ஒருங்கிணைத்தார்.

 

     

 

   

*****

 

 



(Release ID: 1907956) Visitor Counter : 88


Read this release in: English