ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் 78 லட்சம் கிராமப்புற வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது
Posted On:
16 MAR 2023 2:46PM by PIB Chennai
வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் இயக்கம் 2019 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போது, ஊரகப்பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புப் பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 3.23 கோடியாக இருந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள தகவல்களின் படி, 13.03.2023 அன்று நாடு முழுவதும் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் 8.18 கோடி வீடுகளுக்கு கூடுதலாக தற்போது குழாய் மூலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஊரகப்பகுதிகளில் மொத்தம் உள்ள 19.42 கோடி வீடுகளில் இதுவரை 11.41 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊரகப்பகுதிகளில் மொத்தம் உள்ள ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளில் 2019-ம் ஆண்டு 15.08.2019 அன்று 21 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. தற்போது தமிழ்நாட்டில் 78 லட்சம் கிராமப்புற வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. இது மொத்த கிராமப்புற வீடுகளில் 62.15 சதவீதமாகும்.
இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
***
SRI/PLM/RS/KRS
(Release ID: 1907591)
Visitor Counter : 159