நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக்கழகம் மூலம் தனியாருக்கு திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் (உள்நாடு) நடத்தப்பட்ட 5 மின்னணு ஏலம் மூலம் 28.84 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனையானது
Posted On:
15 MAR 2023 5:32PM by PIB Chennai
இந்திய உணவுக்கழகம் மூலம் தனியாருக்கு திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் (உள்நாடு) நடத்தப்பட்ட 5 மின்னணு ஏலம் மூலம் 28.84 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனையானதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் (உள்நாடு) 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விற்பனை செய்ய 26.01.2023 அன்று மத்திய அரசு முடிவு செய்ததாக கூறினார். இதில் 25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, மின்னணு ஏலம் மூலம் வர்த்தகர்கள், மாவு ஆலைகள் உள்ளிட்டவற்றிற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
***
AD/IR/RJ/KPG
(Release ID: 1907320)
Visitor Counter : 116