நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரங்கள் வழியில் அறிவியலைக் கற்றுக்கொள்ளுதல் தொடரை இந்திய தரநிர்ணய அமைவனம் தொடங்கியது

Posted On: 14 MAR 2023 5:00PM by PIB Chennai

மாணவர்கள் தரங்கள் வழியில் அறிவியலை கற்றுக்கொள்வதற்கான தொடரை மத்திய அரசின் தேசிய தர அமைப்பான இந்தியத்தர நிர்ணய அமைவனம் தொடங்கியுள்ளது.

இந்தியத் தரத்திற்கு தேவைப்படும் வகையில் பல்வேறுப் பொருட்களின் தரம், செயல்பாடு மற்றும் பரிசோதனை உற்பத்தியில் பயிற்சி ஆகியவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் உதவுவதற்காக அறிவியல் ரீதியிலான கருத்துகள், தத்துவங்கள் மற்றும் விதிகளைப் பயன்படுத்த இந்தப் பாடமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியத் தர நிர்ணய அமைவனம் அதிகாரிகள் உரையாடல் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளனர். இவை இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் எந்தவொரு சூழ்நிலையையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், தரத்தை அறிந்துகொள்ளும் வகையிலும் பாடத்திட்டங்கள் இருக்கும்.

 

***

AD/IR/SG/RR

 

 


(Release ID: 1906949) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi