சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சாதியம், பிராந்தியவாதம், மொழித் தீவிரவாதம் ஆகியவை சமூகத் தீமைகளாகும்: மத்திய அமைச்சர்
प्रविष्टि तिथि:
14 MAR 2023 5:25PM by PIB Chennai
சாதியம், பிராந்தியவாதம், மொழித் தீவிரவாதம் ஆகியவை சமூகத் தீமைகளாகும் என்றும் இவற்றை சமூக இயக்கங்கள், கல்வி, குடிமக்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின மூலமே ஒழிக்கமுடியும் என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்தவாலே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியிருக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கான சட்டங்கள், அமலாக்கப்படுவதோடு, இவற்றை மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அமலாக்க நிதியுதவி அளிக்கப்படுவதாகக் கூறினார். மேலும் மணமக்களில் ஒருவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் கலப்புத் திருமண உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
***
SRI/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1906947)
आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English