விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாவர அடிப்படையிலான உணவுகள் எதிர்காலத் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியமானது- திரு.தோமர்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2023 5:39PM by PIB Chennai

தாவரங்கள் அடிப்படையிலான உணவுகள் எதிர்காலத் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியமானது என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். புதுதில்லியில் உணவு கண்காட்சியில் கலந்து கொண்டு பேசிய போது இதனை தெரிவித்தார். தாவரங்கள் அடிப்படையிலான உணவுகள் தேவையை நிறைவேற்றுவதுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் வேளாண் துறைக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வேளாண்துறை சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் தாவரங்கள் அடிப்படையிலான மாற்று உணவு முறை முக்கியமான நடவடிக்கை என்று கூறினார். இதனை நிறைவேற்ற நாம் தயாராக இருந்தால் எதிர்காலத்தில் எந்தவொரு நெருக்கடியையும் நாம் சமாளிக்க முடியும் என்று திரு. நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டார்.

 

***

AD/IR/SG/RR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1906939) வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी