சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS ) - சென்னை கிளையின் ஏற்பாட்டில் நகை வியாபாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது
Posted On:
11 MAR 2023 4:31PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது
இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம் , நகை வியாபாரிகளுக்கான ஜுவல்லர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 11 மார்ச் 2023 இன்று நடத்தியது. இந்த பயிற்சி/விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வான்டேஜ் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் 82 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ எச்.எம். சுல்தான் மொகிதீன், சென்னை நகை வியாபாரிகள் சங்க தலைவர் வரவேற்று பேசினார். ஸ்ரீமதி. ஜி. பவானி, விஞ்ஞானி-இ/இயக்குனர் மற்றும் தலைவர்(சென்னை கிளை அலுவலகம்) தொடக்க உரை மற்றும் நிகழ்ச்சி நோக்கங்களை முன்மொழிந்தார். தொழில்நுட்ப விளக்கக்காட்சியை விஞ்ஞானி - சி/துணை இயக்குநர் ஸ்ரீ தினேஷ் ராஜகோபாலன் வழங்கினார்.
8CAF.jpeg)
பங்கேற்பாளர்கள், நகை வியாபாரிகள் விழிப்புணர்வு கூட்டத்தில் BIS ன் முயற்சியைப் பாராட்டினர். விஞ்ஞானி - சி, துணை இயக்குனர் ஸ்ரீ தினேஷ் ராஜகோபாலன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
ZBUS.jpeg)
***
SRI/DL
(Release ID: 1905901)