சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
08 MAR 2023 7:07PM by PIB Chennai
சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் மார்ச் 8, 2023 அன்று, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பாலின சமநிலைக்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் என்பது சர்வதேச மகளிர் தினம் 2023-ன் பொருளாகும்.
இந்நிகழ்ச்சியை டாக்டர் பிரபா தொகுத்து வழங்கினார். அதைத் தொடர்ந்து பெண்கள் அதிகாரம் பெறுவது குறித்து பெண் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பாடிய பாடலுக்கு எம்டெக் மாணவர்கள் நடனம் ஆடினார்கள். சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டக் குழு தலைவரும், சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி முதன்மை விஞ்ஞானியுமான டாக்டர் ஸ்மிதா கோபிநாத் உரையாற்றினார்.
சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவள்ளி வரவேற்புரையாற்றினார்.
E57T.JPG)
UYEJ.JPG)
***
AP/IR/RJ/RJ
(Release ID: 1905152)
Visitor Counter : 151