சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
'இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை' புத்தகத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா பிரகதி மைதானத்தில் நடைபெறும் ஒர்க்ஸ் புத்தகக் கண்காட்சி 2023 இல் வெளியிட்டார்
"ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணங்கள் இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடியதாகும். இது உலக சாத்தியக்கூறுகள் மற்றும் தீர்வுகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் கொவிட் -19 பாதை நமது பாரம்பரிய வேர்களில் சார்ந்து உள்ளது."
- டாக்டர் மன்சுக் மாண்டவியா
"இந்தியா ஒரு முன்மாதிரியான தடுப்பூசி கொவிட் மேலாண்மை மாதிரியை அமைத்தது. இதன் விளைவாக 3.4 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன"
Posted On:
04 MAR 2023 4:56PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலக புத்தகக் கண்காட்சி 2023 இல் இந்திய அரசின் கூடுதல் செயலர் ஸ்ரீ சஜ்ஜன் சிங் யாதவ் எழுதிய 'இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை கோவ் பாக்ஸ் முதல் வாக்சின் மைத்ரி வரை' என்ற புத்தகத்தை இன்று வெளியிட்டார். கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் இந்தியாவின் அற்புதமான சாதனைகளை புத்தகம் விவரிக்கிறது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்திய அறிவியல் சமூகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள நட்சத்திர சுகாதார வல்லுநர்கள் மீது பிரதமர் திரு நரேந்திர மோடியின் நம்பிக்கையைப் பாராட்டிய டாக்டர் மாண்டவியா, நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்களின் கூட்டு முயற்சியானது இந்தியாவை சமாளிக்க முடியாத சவால்களை வென்று இதுவரை எந்த நாடும் செய்யாத சாதனையை அடைய வழிவகுத்தது என்றார். உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசிகளை நாம் சரியான நேரத்தில் வழங்குகிறோம். சுகாதார நிபுணர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டிய டாக்டர். மாண்டவியா, "உலகின் மிகப்பெரிய கொவிட் தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியா 2.2 பில்லியன் டோஸ்களை நாடு முழுவதும் எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் கொண்டு சேர்த்ததன் விளைவாக 3.4 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன" என்று கூறினார். மற்ற நாடுகள் தயக்கத்துடன் போராடும் போது இந்தியா ஒரு முன்மாதிரியான தடுப்பூசி சார்பு கொவிட் மேலாண்மை மாதிரியை அமைத்தது என்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
டாக்டர். மாண்டவியா, "தொற்றுநோய் நெருக்கடியை மட்டும் விவரிக்காமல், 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தடுப்பூசி வரலாற்றையும் விவரிக்கும் விரிவான பாணியில் ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் தடுப்பூசி இயக்கம் சித்தரிக்கப்படுவதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார். "ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணங்கள் இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடியதாகும். இது உலக சாத்தியக்கூறுகள் மற்றும் தீர்வுகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் கொவிட் -19 பாதை நமது பாரம்பரிய வேர்களில் சார்ந்து உள்ளது." "நமது பாரம்பரியம் நமது அறிவையும் அறிவியலையும் பிரதிபலிக்கிறது. அவை காலத்தைத் தாண்டி நிற்கின்றன. மேலும் நெருக்கடி காலங்களில் முன்மாதிரியாக நிரூபிக்கப்பட்டுள்ளன." என்று அவர் கூறினார்.
நமது கை கூப்பி வணங்கும் பாரம்பரிய வாழ்த்து 'நமஸ்தே' தொற்றுநோய் நெருக்கடியின் மூலம் உலகளாவிய வாழ்த்துக்கான வழியாக மாறியது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். "நம் மக்கள் நமது பாரம்பரியத்தை உற்று நோக்கும் பொழுது இந்தியாவை நல்ல நிலையில் வைத்திருக்கும் அறிவியல் செயல்முறைகளின் அடிப்படையிலான உலகம் அங்கீகரிக்கும் பாரம்பரியங்களின் ஆழமான களஞ்சியத்தைக் காண்பார்கள்." என்றும் பேசினார்.
செயலற்ற மற்றும் மறக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் பாரம்பரியத்தின் பொக்கிஷங்களை பற்றிப் பேசும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணங்களை உருவாக்க வேண்டுமென எழுத்தாளர்களை சுகாதார அமைச்சர் ஊக்குவித்தார்.
சுகாதாரச் செயலர் திரு ராஜேஷ் பூஷன், தடுப்பூசிகள் மூலம் 12 வகையான நோய்களைத் தடுக்கலாம் என்று கூறினார். இந்திய அரசு இந்த தடுப்பூசிகளை தாய்மார்கள், இளம் குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்தவர்கள் என தேவையானோர் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது.
"இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை- கோவ் பாக்ஸ் முதல் வாக்சின் மைத்ரி வரை" என்ற இந்தப் புத்தகம் இந்தியா நடத்தும் உலகின் மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. தடுப்பூசி பற்றிய தயக்கம், ஆர்வம், கிடைக்கும் தன்மை, போக்குவரத்து வசதி போன்ற கடினமான பன்முகச் சவால்களை எதிர்கொண்டு தீர்வளிக்கிறது.
***
AP/CJL/DL
(Release ID: 1904239)
Visitor Counter : 164