சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சி.வி.ஆர்.டி.இ. சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இந்தி கருத்தரங்கு
இடுகை இடப்பட்ட நாள்:
23 FEB 2023 6:24PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் முதன்மை ஆய்வகமான சென்னை அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் போர் ஊர்திகள் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனம் (CVRDE) இரண்டு நாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இந்தி கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கின் இராண்டாம் நாள் நிகழ்ச்சி நாளை நடைப்பெறும்.
அதிகாரப்பூர்வமாக இந்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. டாக்டர். ரவீந்திர சிங், இயக்குநர், நாடாளுமன்ற விவகாரங்கள் இயக்குநரகம் & அலுவல் மொழி, டாக்டர் தீனாநாத் சிங், துணைப் பொது மேலாளர், தெற்கு ரயில்வே, திரு. வி. பாலமுருகன், இயக்குநர், சி.வி.ஆர்.டி.இ., டாக்டர். வி. பாலகுரு, இணை இயக்குனர், சி.வி.ஆர்.டி.இ. உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


AP/ TV/ KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1901788)
வருகையாளர் எண்ணிக்கை : 187