சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

எம்பிஏ சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: என்ஐடி திருச்சி

Posted On: 22 FEB 2023 6:28PM by PIB Chennai

என்ஐடி திருச்சிராப்பள்ளியின் மேலாண்மை படிப்புகள் துறை சார்பாக 2 ஆண்டுகள் முழுநேர நேரடி எம்பிஏ பட்டமேற்படிப்பின் 45வது பேட்ஜ் வரும் ஜூலை 2023-ல் தொடங்க உள்ளது. 

விண்ணப்பதாரர்கள் எந்தப் பாடப் பிரிவிலும் முழுநேர நேரடி இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இளங்கலைப் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டில் உள்ளவர்களும், பொது நுழைவுத் தேர்வு 2022-ல் தேர்ச்சிப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பொது நுழைவுத் தேர்வு 2022-ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆன்லைன் நேர்முகத் தேர்வு, பாடத்திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், இதரப்பிற்படுத்தப்பட்டோர், ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசின்  ஒதுக்கீடு பின்பற்றப்படும்.  ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் என்ஐடி திருச்சி இணையதளம் www.nitt.edu என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு 28 பிப்ரவரி 2023 கடைசி நாளாகும்.  

----- 

AP/GS/KPG/KRS


(Release ID: 1901507)
Read this release in: English