சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

प्रविष्टि तिथि: 20 FEB 2023 3:05PM by PIB Chennai

இந்திய விமான நிலைய ஆணையமும், விமான நிலையங்களும் எதிர்காலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் எப்போதும் முனைப்புக் காட்டுவதன் விளைவாக வாடிக்கையாளர்களின் வசதிகளை அனைத்து நிலைகளிலும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் கூட்டமைப்பு 21.02.2023 அன்று சென்னை விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிகள் மேம்பாடு அடையும். இந்தக் கூட்டமைப்பின் மூலம், தேவையற்ற காலதாமதங்கள் குறைக்கப்பட்டு, விமானப் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தைத் தரும்.

மேலும் இந்தக் கூட்டமைப்பு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறைகள், விமானச் சேவைகள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டுப் பணிகள் போன்றவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளை மேம்படுத்தும்.  மேலும், தகவல் பரிமாற்றம், பிரச்சினைகளுக்குச் சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு, உரிய தீர்வுகளை வழங்குதல் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்படும். இந்தக் கூட்டமைப்பின் பணிகள் கீழ்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது:

  • விமான நிலையம் மற்றும் வழிநெடுக ஏற்படும் காலதாமதங்களைக் குறைப்பது
  • விமானப் போக்குவரத்தை ஒழுங்குமுறைப்படுத்துதல்
  • விமானங்கள் வந்திறங்கும் காலதாமதத்தைக் குறைத்தல்
  • விமான நிலையம் மற்றும் விமானப்பாதை போன்றவற்றை மேம்படுத்துதல்
  • சூழ்நிலை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் இந்தக் கூட்டமைப்பின் பங்குதாரர்களிடையே நம்பிக்கையை அதிகரிப்பது
  • பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவம்
  • வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கதவுகள் மற்றும் முனையங்களை முறையாகப் பயன்படுத்துதல்
  • விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக பயணிகள் நிற்கும் இடத்தை மேம்படுத்துதல்
  • பயணிகள் வாகனங்களுக்காகக் காத்திருக்கும் வழித்தடங்களில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைத்தல்
  • எரிபொருள் சேமிப்பு மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல்
  • விமான சேவைகளின் முன்னறிவிப்பை மேம்படுத்துதல்

 

 ****

AP/GS/KPG/PK 

    

 

    


(रिलीज़ आईडी: 1900779) आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English