குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கான அம்சங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை சிந்துதுர்க்கின், கனகவலியில் மத்திய அமைச்சர் திரு. நாராயண் ரானே தொடங்கி வைத்தார்

Posted On: 19 FEB 2023 4:49PM by PIB Chennai

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கான அம்சங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கின், கனகவலியில் அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு. நாராயண் ரானே தொடங்கி வைத்தார்.  இதில், அத்துறைச் செயலாளர் திரு. பி.பி. ஸ்வைன்,  கயிறு வாரியத்தின் தலைவர் திரு. டி. குப்ராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பேசிய திரு. நாராயண் ரானே,  வேலை தேடுபவராக இல்லாமல், வேலை வழங்குபவராக மாற, இந்தத் துறையில் இளைஞர்கள் கால்பதிக்க வேண்டும் என்றார்.  அவ்வாறு கால்பதிக்கும் போது,  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜினாக மாறும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார். 

 

இந்தத் துறையை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறுத் திட்டங்களைப் பட்டியலிட்ட அமைச்சர்,  இந்த கருத்தரங்கம்,   சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைஞர்கள் தொழில்முனைவோராக முன்னேறுவதற்கான உந்துசக்தியாகத் திகழும் என்றும் கூறினார்.

இதன்மூலம், தற்சாற்பு இந்தியா என்ற மத்திய அரசின் இலக்கை அடைவதற்கு வலுசேர்க்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

இதைத்தொடர்ந்து கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பார்வையிட்ட  அவர்,  நிறுவனங்களின் உரிமையாளர்களுடனும்  கலந்துரையாடினார்.  இதில் ஜவுளி, மூலிகைகள், தோல் மற்றும் கயிறு மூலம் தயாரிக்கப்பட்டப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

 

உத்யம் அசிஸ்ட் போர்ட்டலில், பதிவு செய்திருந்த குறு நிறுவனங்களுக்கும்,  தேசிய பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் கேந்திரம் (என்எஸ்எஸ்எச்) பயனாளிகளுக்கும்  இந்தக் கருத்தரங்கத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

***

AP  / ES  / DL


(Release ID: 1900620) Visitor Counter : 166


Read this release in: Marathi , English