சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் சட்டவிரோத தொலைத் தகவல் தொடர்பு அமைப்பு செயல்படுவது பிப்ரவரி 13 அன்று கண்டுபிடிக்கப்பட்டது

Posted On: 15 FEB 2023 5:53PM by PIB Chennai

தொலைத்தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை - சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் சேலம் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன.

இங்கு சட்டவிரோதமான தொலைத்தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணையதளக் கருவி போன்றவை கண்டெடுக்கப்பட்டன. சர்வதேச அழைப்புகளை தேசிய அல்லது உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவது தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதோடு தொலைத்தகவல் தொடர்பு சேவை வழங்குவோருக்கும் அரசு கருவூலத்திற்கும் இழப்பை ஏற்படுத்துவதும் ஆகும்.

இந்நிலையில், சேலத்தில், சட்டவிரோத தொலைத்தகவல் தொடர்பு அமைப்புகள் செயல்பட்ட இரண்டு இடங்களை கண்டறிந்தபோது அவற்றிலிருந்து 19 சிம் கேட்வேகளும், பயன்படுத்தப்பட்ட சுமார் 750 பிஎஸ்என்எல் சிம் கார்டுகளும், சிம் கார்டிலிருந்து வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்கு மாற்றுகின்ற 11 கருவிகளும், செல்பேசிகளும், இதர சில சாதனங்களும், தமிழ்நாடு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சட்டவிரோத செயல்களை செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு தொலைபேசி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

சர்வதேச அழைப்புகள், உள்ளூர் அல்லது தேசிய அழைப்புகளாக மாற்றப்பட்டு அல்லது செல்பேசிகளில் எண் எதுவும் காண்பிக்காமல் வரும் அழைப்புகள் குறித்து தொலைத்தகவல் தொடர்புத்துறைக்கு 1800 110 420 / 1963 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

****

AP/GK/PK 


(Release ID: 1899536) Visitor Counter : 146


Read this release in: English