ரெயில்வே அமைச்சகம்

அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டம்


சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன

Posted On: 10 FEB 2023 4:58PM by PIB Chennai

சென்னை  எம்ஜிஆர் சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது முன்னெடுத்துள்ளது. இதன்படி, இந்திய ரயில்வே கீழ் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்துதல் / நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. இதன்படி தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்தை எளிதாக அணுகுதல், தங்குமிட வசதிகள், கழிவறைகள், மின்தூக்கி வசதிகள், சுகாதாரம், இலவச வைஃபை ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ், உள்ளூர் பொருட்கள் விற்பனை நிலையம், பயணிகள் தகவல் மையம், வணிகம் சார்ந்த கூட்ட அரங்குகள் ஆகிய வசதிகளை இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்கள் பெறும். 

மேலும், கட்டடங்களை மறுசீரமைத்தல், ரயில் நிலையத்தில் இரு புறங்களிலும் அணுகும் வசதி, பல்முனைய ஒருங்கிணைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான  வசதிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகள் ஆகியவை  இந்தத் திட்டத்தில் அடங்கும்.

சென்னை  எம்ஜிஆர் சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, தஞ்சாவூர், திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், பழனி, கும்பகோணம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம்,  காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

-------

SG/TV/KPG



(Release ID: 1898064) Visitor Counter : 313


Read this release in: English , Urdu , Manipuri