ஜல்சக்தி அமைச்சகம்
நிலத்தடி நீர் ஆதாரங்கள் பற்றி மதிப்பீடு
Posted On:
09 FEB 2023 4:30PM by PIB Chennai
மத்திய நிலத்தடி நீர் வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாட்டில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள் பற்றி மதிப்பீடு செய்து வருகிறது. வட்டாரம், வட்டம், மண்டலம், தாலுகா, ஃபிர்கா அளவில் மதிப்பீட்டு அலகுகள் இதனை செய்துவருகின்றன. 2022 முதல் நிலத்தடி நீர் ஆதார மதிப்பீடு வருடாந்திர அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வாரியம் நாடு முழுவதும் பகுதி வாரியாக நிலத்தடி நீர் மட்டத்தை கண்காணித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தில் நீண்டகால ஏற்ற-இறக்கம் இருப்பதை கருத்தில் கொண்டு 2022 நவம்பர் மாதத்தில் இதுகுறித்த தரவு திரட்டப்பட்டது. இதுபற்றி பகுப்பாய்வு செய்ததில், 61.10 சதவீத கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மழை பற்றாக்குறை, மக்கள் தொகை அதிகாரிப்பு, தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர்மட்டத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் என்பது மாநில அரசின் பட்டியலில் இருந்த போதிலும், மழை நீர் சேகரிப்பை சிறப்பாக செயல்படுத்துவது உட்பட, தண்ணீர் சேமிப்பு நிலத்தடி நீர் மேலாண்மை ஆகிய பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
மக்களவையில் இன்று ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
AP/PKV/UM/KPG
(Release ID: 1897777)
Visitor Counter : 232