ஜல்சக்தி அமைச்சகம்
நதிகள் இணைப்பு: ஆந்திராவின் பெண்ணாறு-தமிழ்நாட்டின் கல்லணை இணைப்பு மற்றும் காவேரி-வைகை மற்றும் குண்டாறு இணைப்புக்கு விரிவான திட்ட அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளது
Posted On:
09 FEB 2023 4:37PM by PIB Chennai
1980-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், 30 நதிகள் இணைப்பு (16 சமவெளிப் பிரதேசத்திலும் 14 இமாலயப் பிரதேசத்திலும்) அடையாளம் காணப்பட்டன. இவை தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களில் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றோடு தொடர்புடைய பெண்ணாறு (சோமசீலா)-காவேரி (கல்லணை) இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளது என்று மக்களவையில் இன்று, எழுத்து மூலம் அளித்த பதிலில், ஜல் சக்தித்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் டூடு தெரிவித்தார்.
இதேபோல் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றோடு தொடர்புடைய காவேரி (கட்டளை)-வைகை-குண்டாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கைப் பூர்த்தி அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நதிகள் இணைப்புத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தண்ணீர் பகிர்வு, தேவைப்படும் சட்டபூர்வமான ஒப்புதல்கள் கிடைத்தபின் அமலாக்க கட்டம் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார். இந்தத் திட்டங்களைப் பொருத்தவரை, பூர்த்தி செய்வதற்கு கால வரம்பு நிர்ணயிப்பது சிரமம் என்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இடையே நீர்ப் பங்கீடு மற்றும் பிற பிரச்சனைகளில் ஒருமித்தக் கருத்து எட்டப்படுவதைக் பொருத்தே முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
***
AP/SMB/RJ/KPG
(Release ID: 1897754)
Visitor Counter : 201