சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கோதுமையின் மொத்த மற்றும் சில்லரை விலையை குறைப்பதற்காக 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வெளிச் சந்தையில் விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2023 3:40PM by PIB Chennai

 

கோதுமையின் மொத்த விலை மற்றும் சில்லரை விலையை குறைப்பதற்காக  30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை  வெளிச் சந்தையில் விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் 2023 ஜனவரி 27 அன்று 85,000 மெட்ரிக் டன் கோதுமையை விற்பனை செய்ய இ- ஏலத்திற்கு அறிவிப்பு வெளியிட்டது.

இதனையடுத்து, 01.02.2023 அன்று 21 கிடங்குகளில் இருந்து நடத்தப்பட்ட இ- ஏலத்தின் மூலம் 46,090 மெட்ரிக் டன்  கோதுமை பல்வேறு ஏலதாரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு வெளிச்சந்தையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசுக்கு 10,000 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான இ-ஏல அறிவிப்பை இந்திய உணவுக் கழகம்  10.02.2023 அன்று வெளியிட உள்ளது. இந்த ஏலம், 15.02.2023 அன்று நடத்தப்படும் என இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

****

AP/SMB/RS/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1897371) வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க: English