சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ் 'தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு' என்ற சிறு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது


மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட, சமூக மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், முழுத் திறனுடன் செயலாற்றவும், தேசத்தைக் கட்டியெழுப்பி உலகளவிலான தாக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கவும் ஆழ்ந்த, அனுபவமிக்க, வேடிக்கையான செயலாக்கங்களை உருவாக்குவதுதான் இந்த சிறு பாடத்திட்டத்தின் நோக்கமாகும்

Posted On: 08 FEB 2023 3:14PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்)'தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு' (Personal and Professional Development) என்ற சிறிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதுஇளங்கலை மாணவர் ஒருவர் பாடத்திட்டத்தில் தகுதிபெற ஏராளமான பாடங்களை எடுக்க வேண்டிய அவசியம் இருந்து வருகிறது.

மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் இந்த பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள்செயலாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. 'தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடுஎன்ற சிறிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு ஐஐடி மெட்ராஸ் செனட் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இக்கல்வி நிறுவனம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுக்காக பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறதுஆண்டுதோறும் ஏறத்தாழ 1,500 மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்குப் பதிவு செய்கின்றனர்மாணவர்களின் கலாச்சாரம்திறமைதலைமைத்துவத்தை மாற்றி அமைப்பதுடன் முழுமையான வளர்ச்சியை அடைவதற்கான இக்கல்வி நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறிய பாடத்திட்டம் அமையும்.

அனைத்து பி.டெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம்ஐஐடிஎம்-ல் படிக்கும் அனைத்து மாணவர்களும் அவர்கள் எந்தப் பாடத்திட்டத்தை எடுத்துப் படித்து வந்தாலும் இதனை விருப்பப் பாடமாக மேற்கொள்ளலாம்.

இத்தகைய படிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், "சுய கண்டுபிடிப்புசுய விழிப்புணர்வுசுய தலைமைத்துவம்சுய தேர்ச்சி போன்றவற்றின் மூலம் ஒருவரின் முழுத் திறனையும் செயல்படுத்தி உள் (மனிததூண்டுதலை நிறைவுசெய்ய தனிப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் உதவுகின்றனகுறிப்பாக நமது இளைஞர்களின் மனங்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் வகையில் இத்திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்நமது மாணவர்கள் பல்வேறு தொழில் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்குடன் தனிப்பட்ட மற்றும் மாற்றத்தக்க திறன்களை உருவாக்க தொழில்முறை பாடத்திட்டங்கள் உதவுகின்றனஎன்றார்.

ஐஐடி மாணவர்கள் குழுக்கள்அணிகள்தூதுப்பயணங்கள்நிறுவனங்கள்அமைப்புகள்சங்கங்கள்மாநிலங்கள் மட்டுமின்றி இந்த நாட்டிற்கே கூடத் தலைமை தாங்கிச் செல்கின்றனர்.  பெருகிவரும் போட்டித்தன்மைதேவை மிகுந்தநிச்சயமற்ற உலகை எதிர்கொள்ளும் வகையில்சரியான மனநிலைநோக்கம் மற்றும் உரிமை குறித்த உணர்வுமீட்புத்திறன்மதிநுட்பம் ஆகியவற்றுக்குத் தேவையான கருவிகள் மற்றும் திறன்களுடன் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது அவசியமாகும்

நிபுணத்துவம் மிக்கஆதரவு அளிக்கும் முன்னாள் மாணவர்கள் இடம்பெற்றிருப்பதால் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும்அர்த்தம் மிகுந்ததாகவும் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளதுபிரசாந்த் வாசுஸ்ரீராம் கல்யாணராமன்சியாமளா ராஜாராம்பிரசன்னா குண்டுரிகார்த்திக் வைத்தியநாதன்உமாசங்கர் தித்திஸ்ரீதர் பூவராகவன்சந்தியா சேகர்நம்ரதா வோராரிதுபர்ணா கோஷ்வினய் குல்கர்னிமாலதி ரகுநாத் ஆகியோர் முக்கிய பங்களிப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்விஜயலட்சுமி வெங்கட்ராமன்பிரீத்தி அகல்யாம்சத்யா சேஷாத்ரிதேவ்தாஸ் மேனன்நிலேஷ் வாசாசீனிவாசன் சிவகுமார் ஆகியோர் ஆசிரியர்களாக இருப்பார்கள்சிவா சுப்பிரமணியன்கார்கி சாண்டில்யாமிருணாளினி ராமகிருஷ்ணன்அனுஷா எம்வி ஸ்ரீராம்பார்வதி ராமநாதன்சத்யா ஆர்.ஸ்ரீராம்அம்ருதா ஆனந்த் ஆகியோர் சிறப்பு ஆசிரியர்களாக செயல்படுவார்கள்.

இதனை பாடத்திட்டமாக இடம்பெறச் செய்வதன் மூலம்ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கவும்நிலையான மதிப்பையும் செல்வத்தையும் உருவாக்கவும் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றிருப்பதை தொழிலதிபர்களுக்கு எடுத்துரைக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

வரவிருக்கும் 'தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாடுசிறு பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில்நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்க்காணும் கருத்துகள் இடம்பெற்றிருக்கும்.

⮚ வாழ்வதற்கான ‘மகிழ்ச்சியை மையப்படுத்திய’ அணுகுமுறை

⮚ படைப்பாற்றல் பழக்கங்களை உள்வாங்குதல்

⮚ ஒரு தலைவரின் ஒருங்கிணைந்த பகுதியாக இடம்பெறுதல்

⮚ சுய தேர்ச்சிசுயமரியாதை மற்றும் சுய கண்டுபிடிப்பு

⮚  சாதக விளைவுகளை ஏற்படுத்தும் அணுகுமுறை மூலம் மதிநுட்பத்தை வளர்த்தல்

⮚ வளமான

...

(Release ID: 1897306) Visitor Counter : 196


Read this release in: English