கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நதிநீர் வழியாக பயணிக்கும் மிக நீளமாக கங்கா விலாஸ் கப்பல் உள்ளூர் சந்தைகளுக்கு பலனளிக்கும் விதமாகவும், நதிக்கரைகளில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2023 2:31PM by PIB Chennai

பிரதமர் காணொலி மூலம் நதிநீர் வழியாக பயணிக்கும் மிக நீளமாக கங்கா விலாஸ் கப்பலை கடந்த ஜனவரி 13-ம் தேதி, 2023 அன்று, வாரணாசி கங்கை கரையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  அந்தக் கப்பல் சுமார் 3,200 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்தியா-வங்கதேசம் அதிகாரப்பூர்வ வழித்தடம் வழியாக பயணத்தை மேற்கொண்டு மார்ச் 1-ம் தேதி 2023 அன்று, அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா நதியில் முடிக்கிறது என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.

இந்த நதிநீர்வழிப் போக்குவரத்து கப்பல் பயணத்தின் விளைவாக உள்ளூர் படகோட்டிகளுக்கு வேலைவாய்ப்பு, விடுதி நடத்துபவர்களுக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மூலம் பலனடையும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896936

***

AP/GS/RJ/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1896973) வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu