ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அங்கன்வாடி மையங்களில் தூய்மைக் குடிநீர் இணைப்பு

Posted On: 06 FEB 2023 5:07PM by PIB Chennai

பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்காக அக்டோபர் 2, 2020 அன்று, நீர்வள இயக்கத்தின் கீழ் நாடு தழுவிய இயக்கம் தொடங்கப்பட்டது.  இதன் மூலம் 3.2.2023 அன்றைய நிலவரப்படி, 2019 ஆகஸ்ட் மாதம், பள்ளிகளில் 4.47 லட்சம் குடிநீர் இணைப்புகள் (43%) இருந்த நிலையில், தற்போது 8.99 லட்சமாக குடிநீர் இணைப்புகளாக (87%)  அதிகரித்துள்ளன.  2019 ஆகஸ்ட் மாதம், அங்கன்வாடி மையங்களில் 4.43 லட்சம் குடிநீர் இணைப்புகள் (40%) இருந்த நிலையில், தற்போது 9.22 லட்சம் குடிநீர் இணைப்புகளாக (82%) அதிகரித்துள்ளன.

இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

 

***

AP/IR/RJ/KPG


(Release ID: 1896719) Visitor Counter : 156


Read this release in: English , Urdu