வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட்-அப் இந்தியா நிதி திட்டத்தின் கீழ் 133 தொழில் பாதுகாப்பகங்களுக்கு ரூ.477.25 கோடி ஒதுக்கீடு

Posted On: 03 FEB 2023 1:35PM by PIB Chennai

ஸ்டார்ட்-அப் இந்தியா நிதி திட்டம், ஸ்டார்ட்-அப் இந்தியா முன் முயற்சியின் கீழ் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 133 தொழில் பாதுகாப்பகங்களுக்கு ரூ.477.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.211.63 கோடி 2022 டிசம்பர் 31-ந் தேதி விடுவிக்கப்பட்டதாக  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம்பிரகாஷ் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், ஸ்டார்ட்-அப் இந்தியா முன் முயற்சியின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். இதன் மூலம், புத்தொழில் இயக்கங்கள் கூட்டு தொழில் முயற்சியில் தங்களது முதலீடுகளை உயர்த்தி கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

2021-22-ம் ஆண்டு முதல்  நான்காண்டு காலத்திற்கு ரூ. 945 கோடி என்னும் தொகுப்பு நிதிக்கு ஸ்டார்ட்-அப் இந்தியா நிதித் திட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

***

PKV/AG/RJ


(Release ID: 1896002) Visitor Counter : 227


Read this release in: English