பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத்துறை ஓய்வூதியர்களுக்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வாழ்நாள் சான்றிதழை பிப்ரவரி 20, 2023-க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Posted On: 02 FEB 2023 3:39PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை ஓய்வூதியர்களுக்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வாழ்நாள் சான்றிதழை பிப்ரவரி 20, 2023-க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம்  பேர் பாதுகாப்புத் துறையில், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் ஓய்வூதியம் நிர்வாகத்தின் கீழ் அல்லது ஸ்பார்ஷ் இணையதளம் மூலம் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.   இந்த சான்றிதழை 2022-ம் ஆண்டு நவம்பர்-க்குள் சமர்ப்பிக்காதவர்கள் பிப்ரவரி மாதம் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வாழ்நாள் சான்றிதழை ஆன்லைன்,  பிரத்யேக மொபைல் செயலி, பொது சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

AP/RJ/RR


(Release ID: 1895787) Visitor Counter : 474


Read this release in: English , Urdu , Hindi , Marathi