சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஜி 20 கல்விப் பணிக்குழு 2023 சென்னையில் பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறவுள்ளது

அனைவரையும் உள்ளடக்கிய, சமமான, பொருத்தமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் கற்றல் வாய்ப்புகளுக்கான விஷயங்களில் ஜி 20 கல்விப் பணிக்குழு 2023, கவனம் செலுத்தும்

Posted On: 29 JAN 2023 4:18PM by PIB Chennai

ஜி 20 கல்வி பணிக்குழு  2023-ன் முதல் கூட்டம் சென்னையில் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. "ஒரே  பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருப்பொருளில், அனைவரையும்  உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்தமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவரும் கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இரண்டு நாள்  விவாதங்களில் கல்வி பணிக்குழு கவனம் செலுத்தும். கடந்த தலைமைகளின்  கீழ் நடைபெற்ற கலந்துரையாடல்களைக் கட்டமைக்கவும், முன்னெடுத்துச் செல்லவும் இந்தியா முன்மொழிகிறது. கல்வியின் முழுமையான மாற்றத்திற்கான  திறனை உணராமல் தடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும். இந்த உணர்வின் அடிப்படையில்  முன்னுரிமைப் பகுதிகள் ஆலோசனைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன, அவை பின்வருவனவற்றைச் செய்ய உதவும்:

அ) உலகெங்கிலும் உள்ள கற்பவர்கள்  எதிர்கொள்ளும் முக்கியப்  பிரச்சனைகளை, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பயனுள்ள கருவியாக கல்வி மாறுவதை தடுக்கும் பிரச்சனைகளைக்  கண்டறிந்து தீர்வு காண்பது;

ஆ) கடந்த காலங்களில் பெற்ற பலங்கள், குறிப்பாக கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் பற்றிய கட்டமைப்புக்கு உதவுதல்;

இ) கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள், உள்ளடக்கங்கள், பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள், மதிப்பீடு மற்றும் பலவற்றை மறுபரிசீலனை செய்வது, இதன் மூலம் 21 ஆம் நூற்றாண்டில் தேவைப்படும் தகுதிகள்  மற்றும் திறன்களுக்கு  மிகவும் பொருத்தமானதாக கல்வியை மாற்றுவது. மேலும் சமகால சவால்களை எதிர்கொள்ள அனைத்து வயதினரையும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களை கல்வி தயார்படுத்துகிறது என்பதை உறுதிசெய்வது;

ஈ) அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் அதை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கும் மக்கள், தொழில்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவித்தல்.

மேற்கூறிய அணுகுமுறைக்கு இணங்க, ஜி20 கல்விப் பணிகுழு கூட்டத்தில் விவாதிக்க பின்வரும் நான்கு முன்னுரிமை விஷயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

1. அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும்  குறிப்பாக கலவையான கற்றல் சூழலை உறுதி செய்தல்

2. ஒவ்வொரு நிலையிலும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை மேலும் உள்ளடக்கிய, தரமான மற்றும் கூட்டுமுயற்சியாக்குதல்

3. திறன்களை உருவாக்குதல், வேலையின் எதிர்காலச் சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவித்தல்

4. ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், வளமான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் புதிய கண்டுபிடிப்புகளை  ஊக்குவித்தல்

2023 ஜி 20 உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தரமான கல்வி மற்றும் திறன்வளர்ச்சியில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க ஜி 20 நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 ஜி 20 உச்சிமாநாட்டின் கருப்பொருளான 'ஒரே பூமி ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்', என்பது உலகம் ஒரு குடும்பம் என்ற இந்தியாவின் பண்டைய நம்பிக்கையை  எதிரொலிக்கிறது. புவிக்கோள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களுக்குத் தீர்வு காண, கல்வி உள்ளிட்டவற்றில் நாம் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக  தமிழ் நாட்டில் ஜி 20 கல்விப் பணிக்குழுவின் இரண்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அவற்றில் ஒன்று சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் 2023, ஜனவரி 31 அன்று நடைபெறவுள்ள “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு” என்பது பற்றிய கருத்தரங்காகும்.

மற்றொன்று சென்னையில் 2023, பிப்ரவரி 1, 2 தேதிகளில்  நடைபெறவுள்ள ஜி 20 கல்விப் பணிக்குழுவின் முதலாவது கூட்டமாகும்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் 2023, மார்ச் 16-17 தேதிகளில்  பஞ்சாபின் அமிர்தசரசிலும், மூன்றாவது கூட்டம் 2023, ஏப்ரல்  25-27 தேதிகளில் ஒடிஸாவின் புவனேஸ்வரிலும், நான்காவது கூட்டம் 2023, ஜூன்   20-21 தேதிகளில் மகாராஷ்டிராவின் புனேயிலும் நடைபெறவுள்ளன. இதையடுத்து புனே நகரிலேயே ஜூன்  22 அன்று  ஜி 20 நாடுகளின்  கல்வி அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும்.

*****

 

SMB / DL



(Release ID: 1894490) Visitor Counter : 223


Read this release in: English