சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி மத்தியப்பல்கலைக்கழகத்தில் 74ம் ஆண்டு குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

Posted On: 26 JAN 2023 8:01PM by PIB Chennai

எப்பொழுதும் போல், புதுச்சேரி மத்தியப்பல்கலைக்கழகத்தில் இந்த -- ஆண்டும் 74ம் ஆண்டு குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்கலைக் கழக துணைவேந்தர் பெருமதிப்பிற்குறிய பேராசிரியர் குர்மீத்சிங் சரியாக ஒன்பது மணியளவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து பேராசிரியர் மற்றும் மாணவர்களிடையே உறையாற்றிய துணைவேந்தர், குடியரசுதின சிறப்பையும் அதைப் பெற்றுத்தந்த தியாகிகளையும் அதனால், இந்தியா அடைந்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சி பற்றியும் எடுத்துரைத்தார். இந்தியா மேலும் வளர்ச்சி அடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துரைத்தார் . இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் நாட்டு வளர்ச்சிக்கும் இந்தியா ஆற்றிவரும் சீரிய வளர்ச்சிக்கும் துணை நிற்போம் என்று துணைவேந்தர் தலைமையில் உறுதிலொழி எடுத்துக்கொண்டனர். 74ம் ஆண்டு குடியரசுதின உரையில் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் அவர்கள் இந்தியவின் ஜி-20 நாடுகளின் தலைமையை இந்தியா பெற்றதின் சிறப்பம்சத்தை விரிவாக எடுத்துரைத்தது போற்றுத்துக்குரியதாக அமைந்தது. இறுதியாக துணைவேந்தர் அவர்கள் இந்தியாவின் ஜி-20 தலைமையை போற்றும் விதமாக, ஜி-20  நினைவுப் பூங்காவை புதுச்சேரி மத்தியப்பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்தார்.

  

  

  

*****

 

AP / DL


(Release ID: 1894000) Visitor Counter : 107


Read this release in: English