சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை வருமானவரித் துறை அலுவலகத்தில் குடியரசு தின விழா
Posted On:
26 JAN 2023 5:14PM by PIB Chennai
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் 74-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் திரு ஆர். ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ரவிச்சந்திரன், சுதந்திரத்துக்காக பாடுபட்ட பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மாவீரன் அழகுமுத்து கோன், தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார், வேலு நாச்சியார் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று கூறிய அவர், மூன்று ஆண்டுகளில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் போது, தமிழ்நாடு நாட்டின் ஜிடிபி பங்களிப்பில் பெரிய மாநிலமாக மாறும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலக வளாகத்தில் உள்ள அகரம் குடியிருப்பு பகுதியில் மரம் நடும் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார் என்று சென்னை வருமானவரி அலுவலக கூடுதல் ஆணையர் திரு வி.வித்யாதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****
AP / PKV / DL
(Release ID: 1893937)
Visitor Counter : 136