சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

30 சிபிஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் காவலர்கள் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன

Posted On: 25 JAN 2023 7:52PM by PIB Chennai

30 சிபிஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களது சீரிய சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் காவலர்கள் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.  இந்த ஆண்டுக்கான  குடியரசு தினவிழாவில் இந்தப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.   

இதில் புகழ்பெற்ற சேவை புரிந்த 6 அதிகாரிகள் / பணியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் காவலர் பதக்கங்களும் (Distinguished Service), 24 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் காவலர் பதக்கங்கள் (Meritorious Service) வழங்கப்படுகின்றன.

இந்த 30 பேரில்  புதுதில்லி, சென்னை, காஸியாபாத், பெங்களுரு ஆகிய நகரங்களின் சிபிஐ அலுவலகங்களை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

 

 

 

******

ES/PK/KRS


(Release ID: 1893745) Visitor Counter : 122


Read this release in: English