பாதுகாப்பு அமைச்சகம்
நாளை நடைபெறவுள்ள 7-வது முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தின கொண்டாட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையேற்பு
Posted On:
13 JAN 2023 7:18PM by PIB Chennai
டேராடூனில் உள்ள ஜஸ்வந்த் ராணுவ மைதானத்தில் நடைபெறவுள்ள 7-வது முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினப் பேரணியில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (14.01.2023) கலந்து கொண்டு உரையாற்றுகிறார். நமது ஆயுதப்படை முன்னாள் வீரர்களின் மிக உயர்ந்த தியாகத்தையும் தன்னிகரற்ற சேவையையும் போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முன்னாள் ராணுவ தலைமை தளபதி ஃபீல்டு மார்ஷல் கே எம் கரீயப்பா, 1953ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நமது ஆயுதப்படை வீரர்களைப் பாராட்டும் விதமாக முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
***
AP/GS/KPG/RJ
(Release ID: 1891101)
Visitor Counter : 182