சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான 10,402 காலிப்பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும்: ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் அறிவுறுத்தல்

Posted On: 09 JAN 2023 8:04PM by PIB Chennai

தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான  10,402 காலிப்பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் திரு அருண் ஹல்தார் அறிவுறுத்தியுள்ளார்.  ஆயத்தீர்வைத் துறை, உள்துறை ஆகியவற்றில்  அதிகபட்சமாக 6841 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், எரிசக்தித்துறையில் 228 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.  இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக மாநில அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு டி.எஸ். ஜவஹர் உறுதி அளித்திருப்பதாகவும் திரு அருண் ஹல்தார் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கு எதிரான 13 சம்பவங்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் 10 சம்பவங்களுக்கு சுமூகதீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.  மற்ற 3 சம்பவங்கள் தொடர் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டு ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான தேசிய ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் சுனில்குமார் பாபு, மாநில அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு டி.எஸ். ஜவஹர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

***************

SM/SG/SMB/AG/RJ


(Release ID: 1889861) Visitor Counter : 161