ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்திய ரயில்வே உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது

Posted On: 21 DEC 2022 4:33PM by PIB Chennai

ரயில்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுப்பதற்கு “ஆபரேஷன் நார்கோஸ்” மூலம் ரயில்வே உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருள் கடத்திலில் ஈடுபடுவோரைக் கைது செய்யவும், சோதனையிடவும், போதைப் பொருட்களை மீட்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு மத்திய அரசு  11.04.2019 அன்று அனுமதி அளித்தது.

அதன்படி,  2020, 2021 மற்றும் 2022 (நவம்பர்) ஆண்டுகளில், 4,556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2125 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.66.53 கோடி மதிப்பிலான  போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்தகவலை மக்களவையில், இன்று ரயில்வேத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885430

-------

AP/IR/KPG/GK


(Release ID: 1885502)
Read this release in: English , Urdu , Marathi