மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மானியம், வட்டி மானியம் ஆகியவற்றை வழங்குகிறது

Posted On: 20 DEC 2022 4:46PM by PIB Chennai

பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மானியம், வட்டி மானியம் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த மானியங்கள் ராஷ்ட்ரீய கோகுல் இயக்கம், பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடைப் பராமரிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி,  மாநில பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும்  விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு மூலதனக் கடன் மீதான வட்டி மானிய வடிவில் ஆதரவு, உழவர் கடன் அட்டைகள் போன்றவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன.

ராஷ்ட்ரீய கோகுல் இயக்கத்தின் கீழ், தகுதி வாய்ந்த தொழில்முனைவோருக்கு அதிகபட்சம் ரூ.2 கோடி வரையிலான 50 சதவீத மூலதன மானியம் வழங்கப்படுகிறது.

பால் பதப்படுத்துதல் மற்றம் மதிப்புக் கூட்டுப் பொருட்களை  பதப்படுத்துதலுக்காக, பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 சதவீத வட்டி மானியத்துடன் முதலீட்டை அதிகரித்துள்ளது. 

கால்நடைப் பராமரிப்பு உள்கட்டைமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பயனாளிகளுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

முதன் முறையாக கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை விவசாயிகளுக்கு மத்திய அரசு உழவர் கடன் அட்டை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

------

(Release ID 1885124)
SM/PKV/KPG/KRS


(Release ID: 1885202)
Read this release in: English , Urdu