புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை மேம்படுத்தும் முன்முயற்சிகளை மத்திய புதிய மற்றும் புதுப்பி்க்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது

Posted On: 20 DEC 2022 3:39PM by PIB Chennai

ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. தேசிய வேதியல் ஆய்வகத்தின் மூலம் அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில், இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.

ஹைட்ரஜனின் வேதியல் ஆற்றலை மின்சாரமாக மாற்றுவதற்கு எரிசக்திக் கலன்களை (செல்கள்) உருவாக்கி அவற்றின் வழியாக வாகனங்களை இயக்க வகை செய்யப்படுகிறது.  இவ்வாறு ஹைட்ரஜன் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்த நடைமுறை இந்தியாவில் வணிக ரீதியில் இன்னும் சோதிக்கப்படவில்லை.  இதற்கான தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பான தகவல்கள் தற்போதைக்கு கிடைக்கவில்லை.

மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

**************  

(Release ID 1885074)

AP/PKV/KPG/KRS

 


(Release ID: 1885155)
Read this release in: English , Urdu , Telugu