குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்பு
Posted On:
19 DEC 2022 1:19PM by PIB Chennai
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம், காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் வாயிலாக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்இஜிபி) வேளாண் அல்லாத துறைகளில் குறு நிறுவனங்களை உருவாக்க உதவி வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2008-09 நிதியாண்டு முதல் தற்போது வரை 8.34 லட்சம் நிறுவனங்களுக்கு, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், ரூ.20,643 கோடி திட்ட மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ். வழங்கப்பட்ட மானியங்கள், பட்டியலிடப்பட்டுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் தமிழகத்தில், 5,172 திட்டங்களுக்கு ரூ.12,347 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 41,376 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதே போல் 2020-21-ஆம் நிதியாண்டில் 5,188 திட்டங்களுக்கு ரூ.13,881 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 41,504 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2021-22-ஆம் நிதியாண்டில் தமிழகத்தில், 5,972 திட்டங்களுக்கு ரூ.16,445 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47,776 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2022-23ஆம் நிதியாண்டில் (நவம்பர் 30-ம் தேதி வரை) தமிழகத்தில், 3,404 திட்டங்களுக்கு ரூ.9,961 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 27,232 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேனீ இயக்கம் சார்பில், தேனீ சேகரிப்பு பெட்டிகள் வழங்கப்படுவதுடன், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884737
**************
AP/ES/KPG/KRS
(Release ID: 1884883)