நிலக்கரி அமைச்சகம்
கோல் இந்தியா லிமிடெட்டின் பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள்
Posted On:
14 DEC 2022 12:59PM by PIB Chennai
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதி மூலம் நிலக்கரிச் சுரங்கங்களின் அருகில் உள்ள பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்கள் மற்றும் கோல் இந்தியா நிறுவனங்களின் கொள்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 80 சதவீத சமூக பொறுப்புணர்வு நிதியை 25 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் செலவிட வேண்டும்.
சுகாதாரம், ஊட்டச்சத்து, தூய்மைப் பணிகள், குடிநீர் வழங்கல், கல்வி, வாழ்வாதாரம், கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகியவை தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஐந்து நிதியாண்டுகளில், மகாராஷ்டிராவின் அமராவதி உட்பட நாடு முழுவதும் உள்ள கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களால் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் மொத்தம் ரூ.2,625.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இத்தகவலை நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
**************
AP/PLM/RJ/KPG
(Release ID: 1883523)