சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதை வலியுறுத்தி பல்வேறு நிகழ்வுகள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
13 DEC 2022 5:26PM by PIB Chennai

புதுச்சேரிபல் கலைக்கழகத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதை வலியுறுத்தி பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவின் தலைவி பேராசிரியர் மாலா பிகாதியோ முறைப்படி வரவேற்புரை வழங்கினார். அவர் தனது உரையில் பாலின நிலைப்பாடு மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். உரிமைகள் வழங்கப்படுகின்றன, ஆனால் சமூகம் அச்சுறுத்தலை உருவாக்குகிறது மற்றும் ஒரு பெண் புதியதுறைகளில் நுழைய விரும்பும் போது உண்மையில் பாகுபாடுகாட்டுவதாக அவர் கூறினார்.
மாண்புமிகு துணை வேந்தர், பேராசிரியர் குர்மீத்சிங், தலைமையுரையாற்றினார், அதில் அவர் குடும்பத்தில் நிகழும் அதிருப்பதி நிலைமைகளை மற்றும் இன்றளவும் தொடரும் பாலின வேறுபாடுகள் குறித்து வெளிப்படுத்தினார். வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பேராசிரியர் சிங், தண்டிக்கசட்டங்கள் இருந்தும் வரதட்சணை கொடுமை இன்னும் எப்படி இருக்கிறது என்பதையும் வினவினார். வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக இளையதலை முறையினர் உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பேராசிரியர் சிங் விழா ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார், மேலும் இதுபோன்ற பயிலரங்குகள் மற்றும் குழுவிவாதங்கள் நாம் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுவதாக கூறினார்.
தலைமை விருந்தினராக டாக்டர்.வித்யாராம் குமார், வரதட்சணை தடை ஆலோசனை வாரியத்தின் தலைவர், புதுச்சேரி அரசுதனது தொடக்க உரையில், கொரோனா தொற்றின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமைகளின் அதிகரிப்பு குறித்து விரிவாகக் கூறினார், மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த வீடுகளில் அகதிகளைப் போல வாழ்கின்ற நிலைமைக்குதள்ளப்பட்டன என்று கூறினார். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பெண்கள் தங்களுக்கு எதிராக ஏற்படும் எந்தமீறல்களையும் குரல் கொடுத்து புகார் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சி பங்கேற்பாளர்களிடம் “குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும்” என்று டாக்டர் வித்யாவேண்டு கோள்விடுத்தார். மாணவியர் பிரதிநிதிசெல்விலட்சுமி நன்றியுரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளியின் உதவிப் பேராசிரியர் டாக்டர்.குர்மிந்தர்கவுர், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறித்த பேசினார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரானவன் கொடுமை ஒழிப்பு குழுவிவாதம் நடைபெற்றது. குழுநிபுணர்களாக திருமதி.சிதாராநாயர்கெர்டெஸ் - வெளி உறுப்பினர், பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழு; டாக்டர் வித்யாராம்குமார், வரதட்சணை தடை ஆலோசனை வாரியத்தின் தலைவர்; திரு.N.சந்தோஷ், சப்இன்ஸ்பெக்டர்ஆஃப்போலீஸ் - சைபர் கிரைம் பிரிவு, புதுச்சேரி; சமூகப் பணித்துறை பேராசிரியர்.R.நளினி மற்றும் டாக்டர் தனுஜா மும்மிடி கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரானவன் கொடுமைகளைத் தடுக்கவும் செய்தியைப் பரப்பவும் தெருநாடகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
பெண்களுக்கு எதிரானவன் முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிகளை முன்னிலைப் படுத்த அமைப்பாளர்கள் சுவரொட்டிகளை விநியோகித்தனர், அவைபல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளிலும் மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் விநியோகிக்கப்பட்டு ஒட்டப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழு செய்திருந்தனர்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1883120)
வருகையாளர் எண்ணிக்கை : 299