சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பசுமை ஆற்றல் தொழில் நுட்பங்களின் சமீபத்திய அணுகு முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம்

Posted On: 12 DEC 2022 2:01PM by PIB Chennai

பசுமை ஆற்றல் தொழில் நுட்பங்களின் சமீபத்திய அணுகு முறைகள் (NCRTGET 2022)குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை, பசுமை ஆற்றல் தொழில் நுட்பத்துறை, மதன்ஜீத ஆற்றல் தொழிற்நுட்ப புலம் ஏற்பாடு செய்து, புதுவை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங், தொடங்கி உரையற்றினார்.

பசுமை    ஆற்றல் தொழில் நுட்பத்துறை தொடங்கிபத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக NCRTGET 2022 இரண்டு நாள் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. புதுவை பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மற்றும் கலாச்சார மையத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெ.ஏழுமலை மாநாட்டின் குறிக்கோள் பற்றிபேசுகையில், இந்தியா முழுவதிலும் உள்ள அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வித்துறை வல்லுநர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இடையே தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆராய்ச்சிகண்டு பிடிப்புகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்துவதே என்றார். சூரியஒளிஆற்றல், மின்கலன், சூரியவெப்பஆற்றல், உயிர்ஆற்றல், பசுமைக்கட்டிடம், காற்றாலை ஆற்றல் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கான திறமையான முறைகளை உள்ளடக்கிய சுமார் 95 ஆய்வுக் கட்டுரைகள் விவாதிக்கப்பட்டன மற்றும் பதினேழு வல்லுநர்களின் சிறப்புவிரிவுரைகள் வழங்கப்பட்டன. மின்வாகனங்களில் தற்போதைய தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, லித்தியம்-அயன் மின்கலன்கள், சூப்பர் கேபாசிட்டர்கள் மற்றும் மின் வாகனங்கள் பற்றி பேச தொழிற்த்துறை வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் தலைமையேற்று பேசிய துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், மின்உற்பத்தியின் தேவைகள் குறித்தும், மின் ஆற்றல் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மின்வாகன பயன்பாட்டினால் எவ்வாறு நாட்டின் ஆற்றல் தேவைகளை அதிகரித்திரிக்கிறது என்பதையும், ஆற்றலை நாம் எரிசக்தி சாரா ஆதாரங்களில் இருந்து எடுக்க வேண்டியதேவைகளை வலியுறுத்தினார். பெங்களுரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர் பேரா. அனிந்தாஜிபன்பட்டாச்சார்யா ஆற்றல் நுகர்வு, உற்பத்திமற்றும் சேமிப்பு ஆகியவை ஆற்றலின் மூன்று கரங்கள் என்று குறிப்பிட்டார். சமூகத்தின் பல்வேறு ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யலித்தியம்-அயன் அடிப்படையிலான மின்கலன்களுக்கு அப்பால் வேறுசில மின்கலன்களில் ஆராய்ச்சிகளை செய்யுமாறு விஞ்ஞானிகளை அவர் அறிவுறுத்தினார்.

மாநாட்டின் அமைப்புச் செயலாளர் பேராசிரியர்பி.எம். ஜாபர்அலி இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டவளரும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும்பல் வேறு நிறுவனங்களைச் சேர்ந்த முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார். மேலும், வல்லுநர்களாக அழைக்கப்பட்ட பேச்சாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள முதன்மை நிறுவனங்கள் மற்றும் தேசிய ஆய்வகங்களிலிருந்து வரவைக்கப்பட்டனர் எனவும் கூறினார்.

இந்தமாநாட்டுக்கு சவுத் ஆசியா அறக்கட்டளை நிதி உதவி வழங்கியது, இதுயுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். சவுத் ஆசியா அறக்கட்டளை மற்றும் மதன்ஜித் சிங் அறக்கட்டளையின் அறங்காவலர் மேடம் பிரான்ஸ் மார்க்கே 9, டிசம்பர், 2022 அன்று நடைப்பெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறந்த ஆய்வு கட்டுரை விளக்கவுரை வழங்கிய மாணவர்களுக்கு விருதும் ரொக்கப்பரிசும் வழங்கினார். மதன்ஜீத் ஆற்றல் தொழிற்நுட்பபுலத்தின், புல முதன்மையாளர், பேராசிரியர் கே.தரணிக்கரசு, நிறைவு விழாவிற்கு தலைமை வகித்தார்.

***************

 


(Release ID: 1882690) Visitor Counter : 139
Read this release in: English