சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை துறைமுகத்தில் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவர்களின் 66வது நினைவு நாள் நிகழ்வு
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2022 1:04PM by PIB Chennai
சென்னை துறைமுகத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைமுக வளாகத்தில் அமைந்திருக்கும் (சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில்) டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கே அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அன்னாரின் புகைப்படத்திற்கும் மற்றும் துறைமுகத்தின் உள்ளே அம்பேத்கர் துறையில் நிறுவப்பட்டு இருக்கும் அன்னாரின் மார்பளவு சிலைக்கும், சென்னை துறைமுக தலைவர் திரு சுனில் பாலீவால், ஐஏஎஸ், துறைமுக துணைத்தலைவர் திரு எஸ் பாலாஜி அருண்குமார், ஐஆர்டிஎஸ், திரு.எஸ்.முரளிகிருஷ்ணன், ஐடிஏஎஸ், துறைமுக செயலாளர், திரு இந்திரனில் ஹசரா, துறை தலைவர்கள் திரு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, திரு ஜெயசிம்ஹா, திரு மில்டன், திரு ரமனமூர்த்தி, திரு கிருபானந்தசாமி மற்றும் உயர் அதிகாரிகள் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


***************
(வெளியீட்டு அடையாள எண்: 1881112)
வருகையாளர் எண்ணிக்கை : 194