சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சமமான வளர்ச்சி இலக்கை எட்டுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது; மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
Posted On:
04 DEC 2022 7:41PM by PIB Chennai
மத்திய அரசு, அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம், சமமான வளர்ச்சியை எட்டும் இலக்கை உறுதி செய்துள்ளதாக மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை, சமூக அறிவியல் துறை மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். “இந்தியாவின் பொருளாதார எதிர்காலம், இந்தியாவை உலகளாவிய ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கான உத்திகள்” என்ற தலைப்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஒரு மாணவியின் கேள்விக்கு பதிலளித்த திருமதி நிர்மலா சீதாராமன், சமமான வளர்ச்சிப் பிரச்சினைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். அதேசமயம், சமமான வளர்ச்சி இல்லாமல் நீங்கள் தொடர்ந்து செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சேர்ந்து செயல்படாத வரை முதலீடுகள் ஒன்றாக நடக்காத வரை, தேவையான அதிக வளர்ச்சிக்கு வழி இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு இப்போது சுயத் தொழிலை நோக்கி உந்தப்பட்டதாக நிதியமைச்சர் கூறினார். இதற்கான சூழலை உருவாக்குவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதால், ஏராளமான இளைஞர்கள் வேலை அளிப்பவர்களாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு சவால்களுக்கு திர்வு காண புதுமையான தீர்வுகளைக் கொண்டு வர அரசு ஊக்குவித்து வருகிறது. இத்தகையத் தீர்வுகள் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளாக மாற்றப்படலாம். சுயஉதவிக் குழுக்களை ஆதரிப்பது மற்றும் நிதியளிப்பது, திறன் பயிற்சிகள் அளிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்துள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள், தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, இந்தியாவில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 14000-லிருந்து 77000 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். சர்வதேச சந்தைகளில் இந்திய ரூபாயின் மதிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்களை பொதுவாகப் பார்த்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். சமூகத் துறைக்கு மத்திய அரசு அதிகம் செலவழித்து வருவதை தரவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் நிதியமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுதிர் குமார் ஜெயின், பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் பூபேந்திர விக்ரம் சிங் , சமூக அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் பிந்தா பிரான்ஜ்பே ஆகியோர் கலந்து கொண்டனர்
******
AP/PKV/DL
(Release ID: 1880831)
Visitor Counter : 96