சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பாவினி (BHAVINI) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அணுசக்தித்துறையின் சிறந்த விஞ்ஞானியான திரு. கே.வி. சுரேஷ் குமார் பொறுப்பு ஏற்பு

Posted On: 02 DEC 2022 7:41PM by PIB Chennai

அணுசக்தித்துறையின் சிறந்த விஞ்ஞானி பட்டம் பெற்ற திரு. கே.வி. சுரேஷ் குமார் அவர்கள் பாரதிய நாபிக்கிய வித்யூத் நிகம் லிமிடெடின் (பாவினி BHAVINI) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக 2ம் தேதி டிசம்பர் 2022 அன்று கல்பாக்கத்தில் பொறுப்பேற்றுள்ளார் அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

திரு. கே.வி. சுரேஷ் குமார் அவர்கள் இரசாயனப் பொறியியலில் பட்டம் பெற்று மும்பையில் உள்ள அணுசக்தி துறையின் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி பள்ளியில் (29th Batch) 1985ம் ஆண்டு சேர்ந்தார். பயிற்சிக்குப் பிறகு 1986ம் ஆண்டில் கல்பாக்கதில் உள்ள சோதனை வேக ஈணுலையில் (FBTR) ல் சேர்ந்தார். அங்கு திரவ சோடியத்தால் சூடாக்கப்படும் நிராவி தயாறிப்பான் (Steam Generator) டர்பைன் ஜெனரேட்டர் (Turbine Generator) மற்றம் பல்வேறு நீர் மற்றும் நீராவி அமைப்புகளின் பயன்பாடுகளில் பணியாற்றினார். அவர் FBTRன் அணுஉலை வடிவமைப்பின் அணுமானங்களை சரிபார்க்க, இயற்பியல் மற்றும் பொறியியல் சோதனைகளை மேற்கொள்வதில் பெரும்பங்கு வகித்தார். அவர் அணுஉலையின் இயக்கம், சோடியம் அமைப்புகளின் செயல்பாடு, நீர் மற்றும் நீராவி சார்ந்த அமைப்புகள் மற்றும் FBTRல் உள்ள அனைத்து துணை அமைப்புகளிலும் பரந்த அனுபவம் பெற்றவர் ஆவார். அவர் அணு உலையில் பல மாற்றங்களை மேற்கொள்வதிலும், அணு உலை தொடர்ந்து செயலாற்றும் காரணியை மேம்படுத்துவதிலும் பெரும் பங்களித்தார். அவர் FBTRன் அணு உலை வசதிகள் குழுமத்தின் (Reactor Facility Group) இயக்குநராக 2016 முதல் நவம்பர் 2022 வரை பதவி வகித்தார். மேலும் FBTR, KAMINI அணுஉலை மற்றும் எரிபொருள் தயாரிப்பு துறையின் இயக்கத்திலும் பதவி வகித்தார்

திரு. கே.வி. சுரேஷ் குமாரின் பதவி காலத்தில் அவருடைய தொழில் நுட்ப மற்றும் தலைமை பண்புகளால், FBTR அதன் வடிவமைக்கப்பட்ட அளவான 40மெகா வாட்டிற்கு முதன் முறையாக உயர்த்தப்பட்டது. அவர் மேலும் அணுசக்தி துறை ஒழுங்கு வாரியத்தின் (AERB) பல குழுக்களிலும் மற்றும் கல்பாக்கதில் உள்ள முன்மாதிரி வேக ஈணுலையின் (Prototype Fast Breeder Reactor) திட்ட வடிவமைப்பு பாதுகாப்பு ஆய்வுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

இத்தகைய பாராட்டுக்குறிய பிண்ணனியுடன் திரு. கே.வி. சுரேஷ் குமார் அவர்கள் பாவினி நிறுவனத்தால் கட்டப்படும் முன்மாதிரி வேக ஈணுலை (PFBR) இயக்கி அதன் வணிக செயல்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இந்நிறுவனத்தின் முக்கியமான கட்டத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (CMD) பொறுப்பேற்றுள்ளார்.

***************

 



(Release ID: 1880556) Visitor Counter : 142


Read this release in: English