சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இதயங்களை இணைக்க ஒருவருக்கொருவர் அஞ்சல் அட்டைகளை அனுப்புங்கள்


உறவுகளை வலுப்படுத்தும் ஊடகமாக அஞ்சல் அட்டைகள் அமைந்துள்ளது:
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்

Posted On: 02 DEC 2022 5:10PM by PIB Chennai

ஒருவரையொருவர் இணைப்பதற்கு ஒரு தனித்துவம் மிக்க வழியை ​மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஷ் சர்க்கார் விளக்கினார்.

 பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கல்வி  தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை  அமைச்சர், “காசி தமிழ்ச் சங்கம் ஒருவரையொருவர் இணைக்கும் ஊடகமாக மாறியுள்ளது. இந்த பிணைப்பை வலுப்படுத்த, நாம் ஒருவருக்கொருவர் அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும். அஞ்சல் அட்டை நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்திருப்பதை உணர வைக்கும்” என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தனது முகவரி எழுதப்பட்ட அஞ்சல் அட்டைகளை மத்திய இணை அமைச்சர் வழங்கினார். ஆசிரியர்களும் தங்களின் முகவரிகளை எழுதி, மத்திய இணை அமைச்சரிடம் கொடுத்தனர். அனைத்து ஆசிரியர்களுக்கும்  பதில் அளிப்பதாகவும், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் மத்திய இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கூறினார்.

**************

SM/GS/AG/IDS



(Release ID: 1880500) Visitor Counter : 150


Read this release in: English