ஜவுளித்துறை அமைச்சகம்

சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன

தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் பன்னீர்செல்வத்துக்கு சில்ப் குரு விருது

Posted On: 28 NOV 2022 3:23PM by PIB Chennai

2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டன. 30 பேருக்கு சில்ப் குரு விருதுகளும். 78 பேருக்கு தேசிய விருகளும்  வழங்கப்பட்டன. கைவினைஞர்களின் சிறப்பான செயல்திறன், இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித்துறையில் மதிப்புமிக்க பங்களிப்புக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.  

சில்ப் குரு விருதுகள் மிகச் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. 2002-ஆம் ஆண்டு, இந்திய கைவினைத் தொழில்கள் பொன்விழாவையொட்டி இந்த விருது நிறுவப்பட்டது. சில்ப் குரு விருதில் தங்க நாணயம் ஒன்று ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

தேசிய விருதுகள் 1965ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. தேசிய விருதுகள் உலோகப் பதிவு, கைபின்னல் வேலை, மட்பாண்டம் செய்தல், களம்காரி, பந்தானி, அச்சு பதித்தல்,தஞ்சாவூர் ஓவியம், தெரக்கோட்டா வேலைப்பாடு, பனை ஓலையில் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவேலைப்பாட்டுத்  திறனுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம், தாமிரப்பத்திரம், சால்வை மற்றும் சான்றிதழ் அடங்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் வி  பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதைப் பெற்றுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த  கே வெங்கடேசன், டெரக்கோட்டா  வேலைப்பாட்டுக்காகவும்,  மாசிலாமணி, ஷோலாபித் வேலைப்பாட்டுக்காகவும், தேசிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

விருது பெற்றவர்களின் முழுமையான விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1879533

**************

AP/PKV/KPG/KRS(Release ID: 1879546) Visitor Counter : 213