சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு சட்ட முகப்புரையின் கல்வெட்டு சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று திறக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2022 5:35PM by PIB Chennai

 ‘அரசியலமைப்பு தினத்தை’ யொட்டி நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசியலமைப்பின் முகப்புரையை சித்தரிக்கும் பலகை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டது. இதனை வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) திரு. ரா. ரவிச்சந்திரன் திறந்துவைத்தார்.

இத்தினத்தை கொண்டாடும் விதத்தில் மற்றொரு நிகழ்வாக, சென்னை வருமானவரி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நீதியரசர் ஆர்.வி. ஈஸ்வர் தலைமை விருந்தினராக பங்கேற்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள் பற்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

கூடுதல் வருமான வரி ஆணையர் (தலைமையகம்), (நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோர் சேவை) திரு அ. சசிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.         

    

       

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1879121) வருகையாளர் எண்ணிக்கை : 210
இந்த வெளியீட்டை படிக்க: English