தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரான்ஸ் சிறப்பு கவனம் செலுத்தப்படும் நாடாக இருக்க இது பிரெஞ்சு திரைப்படம் குறித்த ஆழ்ந்த அனுபவத்தை பெரும் நேரம்
‘பெல்லி எட் செபாஸ்டின்: நவ்வெல் ஜெனரேஷன்’ என்பது ஒரு பிரெஞ்சு திரைப்படமாகும். இது 10 வயது செபாஸ்டின் பெல்லி என்ற நாயுடன் எதிர்கொள்ளும் தருணங்களை விவரிக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் திரையிடல் தற்போது நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53வது பதிப்பில் திரையிடப்பட்டது.
இந்த ஆண்டு 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பிரான்ஸ் சிறப்பு கவனம் செலுத்தப்படும் நாடாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் மார்ச்சு டு சினிமாவில் கௌரவ நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு அளிப்பட்டதின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த 'டேபிள் டாக்ஸில்' அமர்வில் பேசிய இயக்குனரும் தயாரிப்பாளருமான பியர் கோரே, பெல்லி மற்றும் செபாஸ்டியன் ஆகியோர் பிரான்சில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்கள். 60களின் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஜப்பானிய அனிமேஷன் பலதரப்பட்ட நிகழ்வுகளில் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களை கையாள்வது தனக்கு ஒரு பெரிய அழுத்தமாக இருந்தது என்று கூறினார். "இத்திரைப்படம் உரிமையாளர்-செல்ல பிராணி உறவு அல்ல, ஒரு நண்பர் மற்றும் வளர்ந்த மனித-விலங்கு உறவு"., என்று கூறினார்.
இந்த இத்திரைப்படத்தில் நடிக்க முடிவு எடுத்த அனுபவங்களை விவரித்த, நடிகரும், புகழ்பெற்ற திரையுலக மூத்தவருமான ஆரேலியன் ரீகோயிங் அவர், சுயாதீன படங்களில் நடித்த தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார்.
"இந்தியா ஒரு பெரிய, பெரிய நாடு. இந்திய பார்வையாளர்கள் இந்த திரைப்படத்தை பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்” என்று கூறி பியர் கோரே தனது உரையாடலை நிறைவு செய்தார்
சுருக்கம்:
‘பெல்லி எட் செபாஸ்டின்: நவ்வெல் ஜெனரேஷன்’ (Belle et Sébastien: Nouvelle Génération) என்பது குழந்தை செபாஸ்டின் கதையாகும். அவன் தனது பாட்டி மற்றும் அத்தையுடன் மலைகளில் தனது விடுமுறையை கழிக்கிறான். நகரத்தில் இருந்து வந்த அவனுக்கு அவர்களுக்கு ஆடுகளை மேய்க்க உதவுவது ஒரு உற்சாகத்தை அளிக்கவில்லை. அது பெல்லியை சந்திக்கும் வரை. பெல்லி எனும் நாய் அதன் உரிமையாளரால் தவறாக நடத்தப்படுகிறது. இந்த அநீதியை எதிர்த்துப் போராடவும், புதிதாக தனக்கு கிடைத்த தனது நண்பன் பெல்லியை பாதுகாக்கவும் எதையும் செய்யத் தயாராக இருக்கும் செபாஸ்டின், தனது வாழ்க்கையில் ஒரு வித்யாசமான கோடை விடுமுறையை காண்கிறான்.
நடிகர்கள் & குழுவினர்:
இயக்குனர்: பியர் கோரே
தயாரிப்பாளர்: சிடோனி டுமாஸ், கிளெமென்ட் மிசெரெஸ், மத்தியூ வார்டர்
திரைக்கதை: சிசிலி ஆப்ரி, அலெக்சாண்டர் காப்ரே, பியர் கோரே
ஒளிப்பதிவாளர்: கில்லஸ் போர்ட்
படத்தொகுப்பாளர்: டேவிட் மென்கே
நடிகர்கள்: ராபின்சன் மென்சா ரூனெட், மைக்கேல் லாரோக், ஆலிஸ் டேவிட், கரோலின் ஆங்லேட்
**************
PKV / SRI / DL
(Release ID: 1878703)
Visitor Counter : 142