தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

படத்தொகுப்பு மேசையில் வடிவம் பெற்ற ஒரு ஆவணப்படம்: தி ஷோ மஸ்ட் கோ ஆன் இயக்குனர் தியா கௌவாஸ்ஜி

படத்தொகுப்பு மேசையில் ஒரு ஆவணப்படம் வடிவம் பெற்றது. பார்சி நாடகத்தில் ஆர்வம் கொண்ட இயக்குனர், பழங்கால பார்சி நாடக கலைஞர்களிடம் நடத்திய நேர்காணல் படப்பதிவுகளை தமது களஞ்சியத்தில் வைத்திருந்தார். ஆனால் அதனை மறந்துவிட்டார்.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் “தி ஷோ மஸ்ட் கோ ஆன்” என்ற தங்களின் ஆவணப்படம் எவ்வாறு உருவானது என்ற கதையை இதன் தயாரிப்பாளர்கள்  தியா கௌவாஸ்ஜியும், அவரது சகோதரர் ஜல் கௌவாஸ்ஜியும் பகிர்ந்து கொண்டனர்.  நீண்ட காலத்திற்கு பின் பழைய பார்சி நாடக கலைஞர்கள் ஒருங்கிணைந்து தெரிவித்த கருத்துக்களின் நிறைவு படமாக இந்த ஆவணப்படம் சினிமா வெரைட்டி பாணியில் தயாரிக்கப்பட்டிருந்தது.

சுமார் 30 ஆண்டு செயல் இன்மைக்குப்பின் 2017-ல் பழமையான பார்சி நாடக ஆளுமைகள் நாடக மேடைக்கு மீண்டும் வருவதற்கு முடிவு செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த இந்த இயக்குனர் அதனை படம் பிடித்து பாதுகாப்பாக வைத்திருந்தார். சுமார் 100 மணி நேர படப்பிடிப்பு என்னிடம் இருந்தது. இதனை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் என்று இயக்குனர் – தயாரிப்பாளர் – ஒளிப்பதிவாளர் தியா கௌவாஸ்ஜி கூறினார்.

இந்த காட்சிகளை தொகுப்பதற்கு முன் 25-30 மாறுபட்ட நிலைகளில் வகைப்படுத்துவதற்கு 3 மாதங்களை செலவிட்டதாக தியா கௌவாஸ்ஜியின் சகோதரர் ஜல்கௌவாஸ்ஜி கூறினார்.  இந்த காட்சிகளில் சிறப்புமிக்க தகவல்கள் இருப்பதை உணர்ந்து மெதுமெதுவாக இந்த ஆவணப்படம் உருவானதாக அவர் தெரிவித்தார்.

தி ஷோ மஸ்ட் கோ ஆன் என்ற இந்த ஆவணப்படம் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய அரங்கில் கதை அல்லாத படப்பிரிவில் முதலாவதாக திரையிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877834

**************

(Release ID: 1877834)

Sri/SMB/AG/RR

iffi reel

(Release ID: 1877897) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi