சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தபால்காரர் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று

Posted On: 19 NOV 2022 11:31AM by PIB Chennai

அஞ்சல் துறை,  மத்திய அரசின்  ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு  தபால்காரர் மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்கும்  சேவையை  வழங்குகிறது. 

 

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் EPFO ஓய்வூதியம் பெறுவோர்களை 1 நவம்பர் 2022 முதல் தங்கள்  உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு்ள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸட் பேமென்ட்ஸ்  வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 ரொக்கமாக தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

 

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதறழை சமர்ப்பிக்க முடியும். 

 

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் (Ministry of (Communications) கீழ் செயல்படும். இந்திய அஞ்சல் துறையின் (Department of Posts) சார்பி்ல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 01, 2018 அன்று துவங்கப்பட்டு, இந்த குறுகிய காலத்தில், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள 136000 அஞ்சலகங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்தி, 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளது.

 

சென்னை நகர மண்டலத்தில் 1979 நகர்ப்புற மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் மூலம் 2500க்கும் மேற்பட்ட தபால்காரர்கள்  மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் . ஆதார் மொபைல் எண்ணை புதுப்பித்தல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் சார்ந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர்.

 

சென்னை நகர மண்டலம், கடந்த 1 ஜூலை 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை சுமார் 59,962 மாநில அரசு ஓய்வூதியதார்களுக்கு, தபால்காரர்கள்  மூலம் அவரகளின் வீட்டில் இருந்தபடியே  டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்க வழிவகை செய்துள்ளது.   

 

எனவே மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன் படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

 *********

MSV/DL


(Release ID: 1877223) Visitor Counter : 133
Read this release in: English