சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நிறுவனங்களின் முன்கள எரிசக்தி ஊழியர்களுக்காக கழிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த சீருடையை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது

Posted On: 14 NOV 2022 7:09PM by PIB Chennai

இந்தியன் ஆயில் எரிசக்தி நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் இண்டேன் எல்பிஜி சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் என  சுமார் 3 லட்சம் பேருக்கு  பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு “நீடித்த மற்றும் பசுமை” சீருடையை இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் திரு எஸ் எம் வைத்யா தொடங்கி வைத்தார்.

“பாட்டில் அல்லாத - பசுமை எதிர்காலத்தையொட்டி” என்ற தலைப்பில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், அவர் இதனை அறிமுகம் செய்தார்.  உபயோகப்படுத்தப்பட்ட மற்றும் கழிக்கப்பட்ட பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டதன் மூலம், இந்த சீருடைகளுக்கான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இம்முயற்சியின் மூலம் ஆண்டுக்கு 20 மில்லியன் எண்ணிக்கைக்கு சமமான அளவில் சுமார் 405 டன் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படும். 

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு எஸ் எம் வைத்யா, சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சீருடைகள் நமது பசுமை உறுதிப்பாட்டை ஒளிரச் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.  முன்கள எரிசக்தி வீரர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.  

 

 

**************

SG/IR/PK/IDS


(Release ID: 1875905) Visitor Counter : 156


Read this release in: English