சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது

Posted On: 26 OCT 2022 4:47PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலகம்-I  “வலுவூட்டப்பட்ட கண்ணாடி ஃபைபர்  பிளாஸ்டிக் (GRB) பேனல் வகை உள் பயன்பாட்டிற்கான கதவு, ஷட்டர்கள் - இந்திய தரநியமம்  14856:2000” என்ற தலைப்பில், "மானக் மந்தன்” நிகழ்ச்சியை சென்னையில் இன்று 26 அக்டோபர் 2022  அன்று நடத்தியது.

          GRP (வலுவூட்டப்பட்ட கண்ணாடி ஃபைபர்  பிளாஸ்டிக்) என்பது விமானம் மற்றும் ராக்கெட் பாகங்கள் முதல் நுகர்வோர் சாதனங்கள் வரை பல்வேறு துறைகளில் பயன்படக்கூடிய ஒரு பொறியியல் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பாகும். இது முக்கியமாக கூரைகள் மற்றும் கதவுகளுக்கான கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை கட்டிடக் கட்டமைப்புகளுக்கு நிலைத்தன்மை, ஆயுள் மற்றும் வலுவைச்  சேர்ப்பதில் GRP பயனுள்ளதாக இருக்கும். GRP பொதுவாக  அவற்றின் உறுதித்தன்மை மற்றும் வலிமைக்கு பெயர்பெற்றதாலும், பல்வேறு வடிவங்கள், மற்றும் அளவுகளில் மாற்றியமைக்கக்கூடிய பண்புகளைப் பெற்றிருக்கும் காரணங்களாலும் வணிக மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு சிறந்தவை. ஆனால் இந்த தர நியமம் 14856:2000 சிறப்பு கட்டிடங்களான பட்டறைகள், கேரேஜ்கள், குடோன்கள் போன்றவற்றிற்கான பெரிய அளவிலான கதவு ஷட்டர்களை உள்ளடக்காது..

தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்கள் , இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  மூலப்பொருள் தேவைகள் முதல் சோதனை வரை தரநிலையின் விவரக்குறிப்புகள் விவாதிக்கப்பட்டன. பெறப்பட்ட கருத்துக்கள்  தரநியமத்தின்  முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, சிப்பெட்-ன் முதன்மை மேலாளர் டாக்டர் சையத் அமானுல்லா தனது தொடக்க உரையை நிகழ்த்தினார்.திருமதி.G.பவானி, விஞ்ஞானி, இயக்குனர் மற்றும் தலைவர் (BIS-சென்னை கிளை அலுவலகம்) நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியின் நோக்கங்கள் பற்றி விளக்கினார். டாக்டர்.சீபாய், விஞ்ஞானி-சி & ஸ்ரீ டி.பானு கிரண், விஞ்ஞானி-பி, சென்னை கிளை அலுவலகம்-I, BIS  தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தினர். நன்றியுரையுடன் மானக் மந்தன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இத்தகவலை துணை இயக்குனர் (சந்தை மற்றும் நுகர்வோர் விவகாரம்) திரு.எச்.அஜய் கன்னா தெரிவித்துள்ளார்.

  

***************


(Release ID: 1870989) Visitor Counter : 131


Read this release in: English